Wednesday 8 February 2012

பில்லா 2 படத்தில் அஜித்தின் அட்டகாசமான நடிப்பு









பில்லா 2 படத்தில் அஜீத், பார்வதி ஒமணக்குட்டன் உள்ளிட்டோர் பலர் நடித்து வருகின்றனர் . சக்ரி  இயக்க, யுவன்சங்கர்ராஜா இசையமைத்து உள்ளார் இப்படத்தின் கடைசி  கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச்சில்   இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'பில்லா 2'    பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்களாம்.   பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

அஜீத் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் படமாக்கி இருக்கிறார் சக்ரி. இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்கிறது படக்குழு.




 ஆங்கில திரைபடத்தில் வரும் ஹெலிகாப்டர் சண்டைக்காட்சியை போன்று 'பில்லா 2' படத்திலும் ஒரு பிரமாண்டமான சண்டைக்காட்சி இருக்கிறது. அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் இருந்தும் டூப் எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டு தானே நடித்து  உள்ளார் அஜீத்.

Tuesday 20 December 2011

தமிழகம் பாலையாகும்

நேற்று காவிரியை மறுத்தார்கள்; இன்று முல்லைப் பெரியாறை மறுக்கிறார்கள். நாளை 
பாலாறு, பவானி ஆறு மறுக்கப்படும். தமிழகம் பாலையாகும்; தமிழன் தமிழ்நாட்டிலேயே 
அகதியாவான். 
நேற்று தமிழீழத்தில் 1.5 லட்சம் தமிழர்களும், தமிழகக் கடற்கரையோரங்களில் 543 
மீனவர்களும் கொல்லப்பட்டனர். இன்று, கேரள எல்லையில் வாழும் தமிழர்கள் 
தாக்கப்படுகின்றனர். நாளை தமிழகத்தில் வாழும் நாமும் தாக்கப்படலாம். நம் 
தமிழனைக் காக்க, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க, தமிழர்களாகிய நாம் என்ன 
செய்யப்போகின்றோம்? 
சாதி, மதம், கட்சிகளைக் கடந்து தமிழர்களாக அனைவரும் அணி திரள்வோம். பெண்கள், 
குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக ஒன்று கூடுவோம். கம்பம், போடி, தேனி பகுதி 
மக்களுக்கு தோள் கொடுப்போம். சென்னையில் இருக்கும் நமது நண்பர்கள் உறவினர்கள் 
அனைவரையும் வரும் ஞாயிறு (டிசம்பர் 25) மாலை 3 மணிக்கு மெரீனா கடற்கரை கண்ணகி 
சிலைக்கு வரச்செய்வோம். நம் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துரைப்போம். மே பதினேழு 
இயக்கம் முன்னெடுக்கும் இந்த முயற்சியில் நாமும் ஒரு பங்காவோம் 
மீனவர்களுக்காக நாம் ஒன்றிணைந்தது போல், தற்பொழுதும் நம் மக்களின் 
உரிமைகளுக்காக களமாடுவோம். இது தொடர்பான பதிவுகளை அனைவரும் வெளியிட்டு 
விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவோம். ட்விட்டரில் பதிவிட்டு உலகறியச் செய்வோம். 
நமக்கு தெரிந்த அனைவரிடமும் ஒன்றுகூட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து 
அனைவரையும் மெரீனாவிற்கு வரச் செய்வோம். நாம் வெல்வோம். 
நன்றி.

Tuesday 11 October 2011

EVERY INDIAN MUST KNOW THIS FACT ABOUT THE LEADER



Below photo is from a Swiss Magazine Schweizer... Illustriertein (November 1991) – it shows the top holders of Swiss bank accounts at the time.

Rajiv appears in the august company of other dictators like Saddam Hussein, Suharto of Indonesia, etc.

The text below Rajiv’s photo reads: Rajiv Gandhi, Indian, Holds 2.5 billion Swiss Francs (eq. to 13,200 Crores in 1991).

Till date, the Congress party has never refuted / spoken about these allegations.

These are our great leaders on whose birth & death anniversaries the government uses the tax payer’s money to lavishly advertise their so-called ‘achievements’ in all national newspapers ! and name Airports, Highways etc built by our money on their names !!

Sunday 4 September 2011

முடிந்து போனதை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய்

மதுரையில் நடைபெற்ற வேலாயுதம் இசை வெளியீட்டு விழாவை முன்வைத்து
சிலர் முடிந்து போன விஷயத்தை விஷமாக்க முயற்சி செய்வதாக 
நடிகர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை
மதுரையில் சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், 
வேலாயுதம் இசை வெளியீட்டு விழாவும் நடந்தது.  
அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால் 
என்னை கடவுளாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனைக் கண்டவுடன் 
அவர்களை அழைத்து இது போன்று போஸ்டர்கள் ஒடக்க கூடாது, அதனை உடனே 
அகற்ற உத்தரவிட்டேன். அதை ஏற்று உடனே அவர்கள் அகற்றிவிட்டனர். 
மேலும், இனி வரும் காலத்தில் இது போன்று செய்ய மாட்டோம் என்றும் உறுதி கூறினர்.
ஆனால் முடிந்து போன இந்த விஷயத்தை விஷமாக்க சிலர் முயல்கிறார்கள்.
நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். 
எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, 
எங்களை பிரிக்கவோ பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது. நான் ஜாதி, மத, இனத்திற்கு 
அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். மதுரை விழாவில் கறவை மாடுகள்,
கம்ப்யூட்டர்கள், தையல் மிஷின்கள் வழங்கப்பட்டு, மூன்று மாணவர்களின் முழு படிப்புக்கு 
உதவித் தொகையும் வழங்கினேன். தவிர, நான் ஆயிரம் பேரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். 
அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என்பது எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். 
அவர்கள் என்ன ஜாதி, மதம் என்பதும் எனக்கு தெரியாது. 

Wednesday 24 August 2011

புராதன இந்தியா

புராதன இந்தியா!! 100 ஆண்டுகளுக்கு முன்..

இந்த பதிவு எனது சகல இந்திய நண்பர்களுக்குமானது. சில அரசியல், ஊழல், சாதியம், தீண்டாமை, மூடநம்பிக்கை, ஈழத்தமிழர் மீதான அக்கறை போன்ற விடயங்களை தவிர்த்து இந்தியாவை மற்றவர்கள் போல எனக்கும் அதிகம் பிடிக்கும். நிலப்பரப்பு (நிலப்பரப்பில் இந்தியா உலகத்தில் ஏழாம் இடத்தில் இருப்பது தெரிந்ததே), சனத்தொகை (உலகத்தில் இரண்டாவது சனத்தொகை கூடிய நாடு - 1.2 பில்லியன் இற்கும் அதிகம்), கலாச்சார, மொழி, இன பல்வகைமை போன்ற காரணிகளில் பரந்து விரிந்து நிற்கும் ஒரு தெற்காசிய நாடு நம்ம இந்தியா.

சாதாரணமாகவே எமது நாடு என்பது ஏதோ ஒருவகை தன்னிலை உணர்வை மனங்களில் அள்ளி வீசக்கூடிய ஒரு விடயம். அந்தவகையில் எங்கு சென்றாலும் எமது நாட்டிற்கு இணை, ஈடு எம் நாடுதான். அதிலும் எமது நாடுகளின் இயற்கை அழகு, புராதனம், கலாச்சாரம், மொழி போன்ற விடயங்கள் தனித்துவம் மிக்கவையாகவும் எமக்கு பெருமை சேர்ப்பனவாகவும் இருந்து விடுகின்றன. அந்த வகையில் இலங்கையைப் போலவே இந்தியாவும் ஒரு அழகிய நாடு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அதற்கு சான்றாக பல பகுதிகளை குறிப்பிடலாம்.

விடயத்திற்கு வருவோம். (ரொம்ப அலட்டிடேனோ..?? சாரிங்க ..)

இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எமது மூதாதேயரை சந்திக்கின்ற பாக்கியம் எம்மைப் போன்றவர்களுக்கு கிடைக்கவே இல்லை. சிலவேளைகளில் கேள்விப் படக் கூட சந்தர்ப்பங்கள் இல்லாமல் போய்விடுகிறது. அப்படியிருக்க அவர்கள் காலத்தில் நம்ம இந்தியா எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள ஆவல் இல்லாதவர்கள் இருக்கமாட்டார்கள். அந்த உதவியை இன்று நான் செய்கிறேன்.. (தேங்க்ஸ் எல்லாம் வேணாமுங்க.. விடுங்க விடுங்க)

100 ஆண்டுகளுக்கு முன் இந்தியா எப்படி இருந்தது..? இந்த புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது நாமும் கொஞ்சம் அந்தநாட்களில் வாழ்ந்திருக்கலாமோ என்று தோணுவதோடு 100 ஆண்டுகளில் இவ்வளவு மாற்றமா என்று வாய் பிளக்கவும் வைக்கிறது. சரி படங்கள பாக்கலாம் வாங்க..
















Wednesday 3 August 2011

வேடிக்கை பார்க்கும் இந்தியா

தென் மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்த கனிமங்களைத் தேடவும், அதை தோண்டியெடுக்கவும் சீனாவுக்கு சர்வதேச கடல் படுகை ஆணையம் (International Seabed Authority-ISA) அனுமதியளித்துள்ளது. இத் தகவலை சீனாவின் கடல் தாதுக்கள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  1979ம் ஆண்டு கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் விஞ்ஞானிகள் கடல் படுகையை ஆராய்ந்து கொண்டிருந்தபோது மெக்சிகோ அருகே கடலுக்குள் பெரும் மலைகளையும் அதன் மீது சிம்னி போன்ற அமைப்புகளையும் கண்டனர். அந்த சிம்னிகளில் இருந்து சுடுநீர் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பகுதிகளைச் சுற்றி ஏராளமான உலோகத் தாதுக்கள் இருப்பதும் தெரியவந்தது.
அந்தத் தாதுக்களில் தாமிரம் (copper), துத்தநாகம் (zinc), ஈயம் (lead), தங்கம், வெள்ளி ஆகியவை அடங்கும். இவை கடல் நீரில் உள்ள சல்பைடுடன் கலந்து பாலிமெட்டாலிக் சல்பைட்களாக உள்ளன.
இதையடுத்து உலகம் முழுவதுமே இந்த கனிமங்கள் குறித்த ஆர்வமும்,  அதை தோண்டியடுக்க போட்டியும் ஆரம்பமானது.இந்தியப் பெருங்கடலில் இந்த கனிமங்களை தோண்டியெடுக்க சீனா தீவிரமாக களமிறங்கி, அனுமதியும் பெற்றுவிட்டது. சர்வதேச கடல் படுகை ஆணையத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனா இந்த 10,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதியில் கடலுக்கடியில் கனிமங்களைத் தோண்டலாம்.

மேலும் கிழக்கு பசிபிக் கடலில் 75,000 சதுர கி.மீ. பரப்பளவிலும் கனிமங்களை எடுக்க சீனாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்த கையோடு, பசிபிக் கடலில் தனது ஆழ்கடல் ஆய்வுக் களத்தை இறக்கிவிட்டுவிட்டது சீனா. நேற்று 5,180 மீட்டர் ஆழத்தை எட்டிவிட்ட இந்தக் கலத்தில் 3 ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.
இதையடுத்து இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது.

                 கனிம ஆராய்ச்சி என்ற பெயரில் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவை ஒட்டிய பகுதிகளி்ல் சீனாவின் கடற்படை கப்பல்கள் சுற்றி வரும். இந்தப் பகுதியின் கனிமப் படிமங்கள் குறித்த அனைத்து விவரங்களும் சீனா வசம் போகும். மேலும் இந்தப் பகுதியில் நடமாடும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் ரகசிய நடமாட்டத்தையும் சீனாவால் இனி கண்காணிக்க முடியும். இது குறித்த தனது கவலையை இந்திய கடற்படையின் உளவுப் பிரிவு  மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நாம் ராணுவ உதவி செய்யாவிட்டால் சீனா போய் உதவி செய்துவிடுமே என்ற கவலை உள்ள மத்திய அரசுக்கு, நமது நாட்டுக்கு அருகிலேயே சீனா கடலைத் தோண்ட ஆரம்பித்துள்ளது குறித்து கவலையில்